எழும்பூர் ரயில் நிலையத்தில் 195 கிலோ கஞ்சா பறிமுதல்

செவ்வாய், 12 ஜூலை 2016 (15:56 IST)
ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 195 கிலோ கஞ்சா எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


 

 

 
ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னைக்கு சிலைகள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
 
இன்று காலை 6.30 மணிக்கு ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் சோதனை நடத்திய போது ஒரு பெரிய பார்சல் சிக்கியது. அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
 
பார்சலை எடுத்து வந்த கோபால், உச்சப்பன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கஞ்சாவை மதுரைக்கு கடத்தி செல்ல முயன்றதாக தெரியவந்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்