தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பால்உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,'' பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து, இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொடர்பாக விரைவில் தீர்வு வரும் என்று கூறினார்.