17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர்.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

Siva

ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:40 IST)
திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு டாக்டர் ஒருவர் கருக்கலைப்பு செய்த நிலையில் அந்த சிறுமி இறந்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திண்டுக்கல் காந்திகிராமம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் அவர் திடீரென கர்ப்பமானார். இதனை அறிந்த அவரது அத்தை அதிர்ச்சி அடைந்து உடனே அவரை கருக்கலைப்பு செய்ய திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் 
 
அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான இளைஞர்,, கருவை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை மற்றும் கருவை கலைத்த டாக்டர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
டிப்ளமோ படிக்கும் 17 வயது மாணவி கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்