ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா என்ற கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது இரு தோழிகளோடு கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த வழியில் சாலையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த ராஜு கஹார், கைலாஷ் கஹார் மற்றும் நாராயன் குர்ஜார் ஆகிய 3 பேரும் அவர்களைப் பின் தொடர்ந்து உள்ளனர்.
அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அனைவரும் ஓட தோழிகள் இருவரும் தப்பிக்கவே அந்த சிறுமியை அவர்கள் பிடித்துள்ளனர். சிறுமியைக் கடத்திச் சென்ற 3 பேரும் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த சிறுமி அரைக் கிலோமீட்டர் தூரம் நிர்வாணமாக ஓடியுள்ளார். அப்போது அந்த வழியில் வந்த ஆண் ஒருவர் தனது ஆடைகளை அவருக்குக் கொடுத்து அவரைக் காப்பாற்றி போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.