இன்று மற்றும் நாளை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
இன்று மற்றும் நாளை  தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.


தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன.

மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மற்றும் நாளை  தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்