தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் உணவுப் பொருள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது. எனவே போலியான குடும்ப அட்டைகள் நீக்கப்படும். இதன் மூலம் உண்மையான பயனர்கள் பயன்பெறுவர்.