Home Quarantine: கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன??

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:25 IST)
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்னவென தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.
2. வீட்டில் அணைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 
3. தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. 
4. வீட்டை தினமும் 3 முறையாவது கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். 
5. தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டிற்குள் உலா வராமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். 
6. தனிமைப்படுத்தப்பட்டவருடன் வயதானோர், குழந்தைகள், கர்பிணிகள் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். 
7. தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. 
8. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டவரின் உடை, படுக்கை ஆகியவற்றை உதறாமல் தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவக்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்