அரசுப் பள்ளியில் மது விருந்து; 12 மாணவர்கள் கொண்டாட்டம்; ஆசிரியர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 26 ஜூலை 2016 (22:19 IST)
வேலூர் மாவடம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12 மாணவர்கள் பள்ளி வள்ளகத்தில் உள்ளேயே மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மேல்நிலை முதல் குரூப் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பின் வரிசையிலும், நடுவரிசையிலும் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆசிரியை, அதுகுறித்து காரணம் அறிய அருகில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர், தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளார். 
 
அதில் 12 பேர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12 பேரையும் வகுப்பில் இருந்து வெளியேற்றிய தலைமை ஆசிரியர், காலையில் நல்ல முறையில் இருந்த மாணவர்கள், மதியம் மது அருந்தியிருந்தது எப்படி என விசாரித்துள்ளார்.
 
இதில், அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்த நாள் என்பதும், இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவர், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டடத்துக்குள் மற்ற 11 மாணவர்களையும் அழைத்துச் சென்று மது விருந்து வைத்ததும் தெரியவந்தது.
 
இந்த மாணவர்களில் 4 பேர் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவோர் என்பதும், மற்றவர்கள் சாதாரண மதிப்பெண் பெறுவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்