செப்டம்பரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு - தமிழக அரசு பரிசீலனை!

சனி, 5 ஜூன் 2021 (15:16 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த இறுதி முடிவை நாளை தமிழக அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் வரும் செப்டம்பரில் பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. 
 
பிளஸ் டூ தேர்வு குறித்து இன்று சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் வரும் செப்டம்பர் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்