ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்; தினகரன் அணியினர் வாதம்

திங்கள், 18 செப்டம்பர் 2017 (15:05 IST)
கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள்தான் உண்மையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தினகரன் அணியினர் தெரிவித்துள்ளனர்.


 

 
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 
 
இந்நிலையில் தினகரன் அணியினர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதாவது, ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர் கொடி தூக்கியபோது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அணியில் இருந்தார். 
 
அப்போது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அப்போது எடப்பாடி தரப்பில் சபாநாயகரிடம், ஒபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்ட்டது. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
ஆனால் அதற்கு பதிலாக முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் கடிதம் கொடுத்த ஒரே காரணத்தால் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்