10-ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:31 IST)
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரோடு அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
முதல் கட்ட விசாரணையில் மதிப்பெண் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் கண்டித்ததாகவும், இதனால் மன வருத்தத்தில் இருந்த மாணவி விபரீத முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் டிவி பார்க்க வேண்டாம் என பெற்றோர்கள் திட்டியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பத்தாம் வகுப்பு கடந்த சில நாட்களாக மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வருவது அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் ஒரு தற்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட்டுள்ளேன்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்