தமிழகத்தில் +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும், சிறிது தாமதாக தேர்வுகள் தொடங்கும் என சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணி முதல் அதிகாரப்பூர்வமாக வரும் இந்த உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈநிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆம், விருதுநகர் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. பாதுகாப்பு பணிக்காக கடந்த வாரம் கோவை சென்றவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும் - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.