நில அபகரிப்பில் ஜெயலலிதாவைத்தான் கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின் ஆவேசம்
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (12:45 IST)
நில அபகரிப்பு புகாரில் முதலமைச்சர் ஜெயலலிதாவைதான் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று த ி. ம ு.க. பொருளாளர ் ம ு.க. ஸ்டாலின் ஆவேசத்துடன் கூறினார். தமிழ க காவல்துற ை தலைவர ் ( டிஜிப ி) ராமானுஜத்த ை இன்ற ு சந்தித்த ு தன்னில ை விளக்கம ் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலைய ை சேர்ந்த என்.எஸ்.குமார் என்பவர ் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வெளியூரில் இருந்த மு.க.ஸ்டாலின் இன்று காலை தமிழக காவல்துறை தலைவரை சந்திப்பதற்காக டி.ஜி.பி. அலுவலகம் வந்தார். அப்போது, டிஜிபி ராமானுஜம் அலுவலகத்தில் இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜிபியிடம் மு.க.ஸ்டாலின், தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், பொய்யா ன புகாரின ் பேரில ் தன் மீதும், குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப ் பதிவ ு செய்துள்ளதா க விளக்கம் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நில அபகரிப்பு புகாரில் முதலமைச்சர் ஜெயலலிதாவைதான் கைது செய்ய வேண்டும். ஏனென்றால் சிறுதாவூர் நிலத்தை அவர்தான் தற்போது அபகரித்து வைத்துள்ளார் என்று குற்றம்சாற்றினார். வழக்கை சட்டப்படி சந்திப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செயலியில் பார்க்க x