எந்த வழக்கு போட்டாலும் ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்கப்போவதில்லை என்றும் தைரியமாக, தெம்பாக, துணிவுடன் வழக்கை சந்திப்பேன் என்றும் தி.மு.க பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு பேட்டி அளித்த அவர், காலம் கடந்து ஜெயலலிதா ஆட்சியில் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் இது முன்பே எதிர்பார்த்திருந்ததுதான் என்றும் தெரிவித்தார்.
எப்ஐஆர் என்பது நம்மை பொருத்தவரை பர்ஸ்ட் இன்பர்மேஷன் ரிப்போர்ட் என்றும் ஆனால், ஜெயலலிதாவை பொருத்தவரை பிராட் இன்பர்மேஷன் ரிப்போர்ட் என்று இதற்கு பொருள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
எந்த வழக்கு போட்டாலும் ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்கப்போவதில்லை என்றும் தைரியமாக, தெம்பாக, துணிவுடன் வழக்கை சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆற்றல் எனக்கு மட்டுமல்ல; தி.மு.க.வில் உள்ள அத்தனை பேருக்கும் உண்டு என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.