தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பெங்களூர், மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
ஆனாலும் தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி ரூ.500க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ, 2 நாளில் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
இதேபோல் பிச்சிப்பூ ரூ.125க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.50 வரையும் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி ரூ.30க்கும், துளசி ரூ.15 ஆகவும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.5 ஆகவும் விற்றது.