பாலியல் கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் புரியாத புதிர் படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்துள்ளார். சிவப்பு எனக்கு பிடிக்கும், பாலியல் கல்வி மற்றும் நகரில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.