புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 15 வயதில் மகள் இருக்கிறார். அவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்ப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனைக்குச் சென்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.
இந்த நிலையில்,அருகிலுள்ளவர்கள் பூசாரியிடம் மந்திரித்து வந்தால் வயிற்று வலி சரியாகும் என கூறியுள்ளனர். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர், பழனி என்ற பூசாரியிடம் அழைத்துச் சென்றனர்.
அவர், சிறுமியுக்கு தனிமையில் பூஜை செய்ய வேண்டுமென கூறி பெற்றோரை வெளோய்யே அனுப்பிவிட்டு, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் சொன்னால் சாமி குத்தமாகிவிடும் என மிரட்டியதாகத் தெரிகிறது.