சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி

 
செய்முறை:
 
பரோட்டா செய்து கையால் சிறு சிறு துண்டுகளாக செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி,  பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை மசியும் வரை வதக்கவும். அனைத்தும் நன்றாக  வதங்கியதும், சோம்பு தூள் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
 
முட்டை நன்றாக வதங்கியதும் அதில் சால்னா சேர்த்து ஒருசேர கிளறவும். தேவை அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும். சால்னா ஒருசேர சுருண்டதும் பிய்த்து வைத்துள்ள புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக  பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
 
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சூப்பரான முட்டை கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன்,  மட்டன் சேர்த்தும் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்