சுவையான இறால் பொடிமாஸ் செய்ய !!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:37 IST)
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/2 கிலோ
வெங்காயம்  - 2
பச்சை மிளகாய்  - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு  - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகு தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 
இறலை சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் வேக வைத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய ஈரலை சேர்த்து நன்கு வதக்கவும்.
 
மிளகு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி விடவும். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சுவையான இறால் பொடிமாஸ் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்