செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை நீக்கி மசித்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக மசிக்கவும்.
அடுத்து வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகு தூள், காய்ந்த ஆரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும். பிசைத்த கலவையை வேண்டிய வடிவில், வேண்டிய அளவில் உருட்டி வைக்கவும்.