சுவை மிகுந்த சிக்கன் ஸ்டப்டு ரோல் செய்ய !!

திங்கள், 20 ஜூன் 2022 (17:23 IST)
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 100 கிராம்
முட்டை - 2
கொத்திய சிக்கன் - 100 கிராம் (எலும்பு நீக்கியது)
சோயா சாஸ் - 1/4 ஸ்பூன்
அஜினோமோடா - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

கோதுமை மாவில் முட்டை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவுக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

கடாயில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கொத்தகறியை போட்டு பாதியளவு வெந்ததும் அதில் அஜினோ மோடா, சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து ஆறவைக்கவும்.

மாவை சப்பாத்திகளாக உருட்டி சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும். ஒவ்வொரு சப்பாத்தி சதுரத்தின் மீதும் கொஞ்சம் சிக்கன் மசாலா கலவையை வைத்து நீளவடிவில் உருட்டி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள சிக்கன் ஸ்டஃப் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்