குக்கரில் தேவையான அளவு எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை, கிராம்பு பிரியாணி இலை,ஏலக்காய் போட்டு பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
இத்துடன் தக்காளி,கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதங்கியவுடன் சிக்கன், சிறிதுளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.
தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து எண்ணை பிரிந்து மேல் வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தும் ஊறவைத்த அரிசியை கழுவி போட்டு மீதமுள்ள கொத்தமல்லி, புதினா தழையை சேர்த்து வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும்.
அரிசி பாதி அளவு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். முக்கால்பாகம் வெந்தவுடன் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். பின்னர் 2 விசில் விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார்.