இன்று நவராத்திரி விழாவில் மஹிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரியை பூஜிக்க வேண்டும். பரமசிவன், மகாவிஷ்ணு, பிரம்மா இவர்களின் கோபாவேசத்திலிருந்து வெளிவந்த அற்புத ஜோதி மண்டலம் சிவசக்தி முகமாகவும் மற்ற இருவர் அவளின் மற்ற அங்கங்களாகவும், வெளிப்பட பராசக்தியாக உருவெடுத்தாள்.
webdunia photo
WD
சிவபெருமாளன் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், தேவேந்திரன் வஜ்ராயுதத்தையும் கொடுக்க, வில், அம்பு போன்றவற்றையும் தேவர்களிடமிருந்து பெற்ற அன்னை பராசக்தி ராஜராஜேஸ்வரியாக மஹிஷாசுரனை அழிக்கப் புறப்பட்டாள்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.