மஹிஷாசுரனை வதம் செய்ய தேவியாக வராஹியாக அம்பிகை காட்சி தருகிறாள். தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்குக் கிளம்பி வருகிறாள். அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான். தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான்.
இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள். அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள் பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராஹி வடிவத்தில் காட்சியளிக்கிறாள்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.
தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.