தூம்ரலோசன வதம் செ‌ய்‌த இ‌ந்‌திரா‌‌ணி

புதன், 23 செப்டம்பர் 2009 (14:58 IST)
புர‌ட்டா‌சி மாத‌ம் 8ஆ‌மதே‌தி (செ‌ப்ட‌ம்ப‌ர் 24) ‌வியாழ‌க் ‌கிழமையாஇ‌ன்றநவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் 6வதநாளாகு‌ம். இ‌ன்றது‌ர்கஅ‌ம்மனஇ‌ந்தரா‌ணி வடிவ‌த்‌தி‌லஅல‌ங்க‌ரி‌த்தவண‌ங்வே‌ண்டு‌ம்.

அசுரர் தலைவனான சும்பனின் தூதுவன் சுக்ரீவன் தேவியின் சொற்களைக் கோபத்துடன் திரும்பிச் சென்று தன் தலைவனிடம் செய்தி சொன்னாள்.

இதனால் கோபம் கொண்ட சும்பன் தன் படைத் தலைவனான தூம்ரலோசனனை பெரும் படைகளுடன் அனுப்பி தேவியைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.

சண்டிகா தேவியை நெருங்கிய படைத் தலைவனை தேவியானவள் தனது "ஹும்" என்ற கர்ஜனையாலேயே வீழ்த்தி விட்டாள். அவளுடைய சிங்க வாகனம் அந்தப் படைகளுக்கிடையே புகுந்து எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அழித்தது. சண்டிகா தேவியான அம்பிகை தூம்ரலோசன வதம் செய்த இந்திராணியாகக் காட்சியளிக்கிறாள்.

ஆறா‌ம் நாளான இ‌ன்று அ‌ம்மனை செ‌ம்பரு‌த்‌தி முதலான ‌‌சிவ‌ந்த ‌நிறமு‌ள்ள மலர்களால் அர்ச்சனை செய்வது உகந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்