தூம்ரலோசனனும் கொல்லப்பட்டதை அறிந்த அசுரசக்ரவர்த்தியான சும்பன், சண்டமுண்டர்களை போருக்கு அனுப்பி வைத்தான். சிங்க வாகனத்தில் அமர்ந்திருந்த தேவி, சண்ட முண்டர்கள் படைகளுடன் போருக்கு வந்திருந்ததைப் பார்த்த பொழுது அவளது முகம் கோபத்தால் மை நிறமாகி, அவள் நெற்றியிலிருந்து பாசமும், கத்தியும் கொண்ட காளி தோன்றினாள்.
webdunia photo
WD
அசுரர்கள் விட்ட அஸ்திரங்களை காளி பொடிப் பொடியாக்கி விட்டாள். இந்த போரில் முதலில் சண்டன் பலியானான். பின்னால் வந்த முண்டனை காளி தன் குண்டாந்தடியால் அடித்து கொன்றாள். இவர்கள் இருவரின் தலைகளைக் கையில் ஏந்தி காளி சண்டிகா தேவியாகிய பத்ரகாளியிடம் வந்தாள். சாமுண்டி தேவி என்று புகழ் பெற்றாள்.
இன்று ஒரு முறை செய்யும் வழிபாடு நூறு முறை செய்யும் வழிபாட்டிற்கு சமமாகும். சாம்பவி துர்கை அம்மனுக்கு உரிய பாடல்களை பிலகரி ராகத்தில் பாட வேண்டும்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை செய்வது சிறந்தது.