உடல் சூட்டை தணித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கம்பு !!

புதன், 11 மே 2022 (17:11 IST)
தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் சத்து உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் கம்பு சாப்பிடலாம்.


முக்கிய சத்தான வைட்டமின் A வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பு பயிரில் உள்ளது. வெயில் காலத்தில் நிறைய பேர் உடல் சூட்டால் கஷ்டப்படுவார்கள். அவர்களின் உடல் சூட்டைத் தணிப்பதற்கு கம்மங்கூழ் உதவுகிறது.

கம்புவில் உள்ள மக்னீசியம், இரத்தநாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கம்பு சாப்பிடலாம்.

கம்புவில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஒருவர் தினமும் கம்மங்கூழை குடித்து வந்தால், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் கம்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

கம்புவில் நார்சத்து உள்ளதால் அவர்கள் கம்பு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்