உடைந்த எலும்புகள் கூடுவதற்கு என்ன உணவுகளை சாப்பிடுவது நல்லது...?

எலும்பு முறிவின் போது சிகிச்சையில் இருக்கும் சமையத்தில் எலும்பு உறுதியாக்கவும் உடைந்த எலும்புகள் கூடுவதற்கு மாதக் கணக்கில் காத்திருக்க வேனும்.


எலும்புக்கு ஏற்ற உணவு எடுத்துக் கொள்ளாதபோது நீண்ட நாட்களாகும் எலும்புகள் கூடுவதற்கு. அல்லது பலவீனமான எலும்புகள் வளரும்.
 
நமது உடலில் எலும்புகள் பெரும்பான்மையாக கால்சியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் ஆகியவற்றால் உருப் பெறுகிறது. இந்த சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் கண்டிப்பாக அந்த நேரத்தில் தினமும் சாப்பிடுவது கட்டாயம். அதோடு இந்த சத்துக்கள் உடம்பில் வெறும் உணவுகளால் மட்டும் பெற்றிட இயலாது.
 
எல்லும்புகளுக்குத் தேவையான சத்துக்களை விட்டமின் டி தான் உடலுக்கு உருஞ்சுவதற்கு பெரிதும் உதவி செய்கின்றன. எனவே விட்டமின் டி நிறைந்த சூரிய ஒளி உடலில் படும் படியாக இருக்க வேண்டும். தினமும் குறந்த பட்சம் ஒரு அரை மணி நேரமாவது இருப்பது அவசியம். 
 
அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் தினமும் சாப்பிடுவது நல்லது. விட்டமின் டி, கால்சியம் மற்றும் ஒமேகா-3 ஆகியவை உடலுக்கு கிடைக்கப் பெரும்.
 
பழங்களில் அத்திப்பழம் கால்சியம் நிறைந்த ஒரு பழமாகும்.உலராத சீமை அத்தி இன்னும் நல்லது. ஒரு அத்தியில் 170கிராம் கல்சியம் இருக்கிறது. வாழைப்பழம், கொய்யா, இவற்றிலும் கால்சிய சத்து உள்ளது.

சிறு தானியங்களில் ராகி அதிகம்.அவ்வப்போது ராகி கஞ்சி, ராகி தோசை, ராகி, வெல்ல உருண்டை ஆகியவையும் உணவில் எடுத்துக் கொள்ளலாம். மற்றும் கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவிற்கு இணையாக கால்சியம் இருப்பவை. காய்கறிகளில் கேரட், வெண்டை, வெங்காயம், சர்க்கரைவள்ளிகிழங்கு இவற்றிலுள்ள சுண்ணாம்பு சத்து அதிகம்.
 
கீரைகளை என்றால் வெந்தயக் கீரை, வெங்காயத் தாள், காலிஃப்ளவர், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக் இவற்றிலும் கால்சியம் இதிலும் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்