சளித்தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகள் !!

சளியை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்றவற்றைக் குடியுங்கள். மேலும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் தினமும் இரண்டு வேளை கொப்பளியுங்கள்.

கண்களுக்கு கீழே கன்னப் பகுதியில் சுடுநீரில் நனைத்த துணியால் தினமும் பலமுறை ஒத்தடம் கொடுக்கலாம். வெங்காய சாற்றில் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் குடிப்பதன் மூலமும், தீராத சளியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
 
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும். தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
 
சளி அதிகம் பிடித்தால், மூக்கடைப்பு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்நேரத்தில் ஆவி பிடியுங்கள். இதனால் சளி இளகி, வெளியேற ஆரம்பித்து, மூக்கடைப்பில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்