சிறுநீரை நீண்டநேரம் அடக்கி வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன...?

ஒரு நபர் தொடர்ந்து நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அது அவரது உடல் பாகங்களை சேதமடையச் செய்யலாம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. 

சிறுநீரை அடக்கி வைப்பதால்  சிறுநீரகங்களின் அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் வடுக்கள் ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் கடுமையான சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் சிறுநீரைத் அடுக்குவதால் அது  சிறுநீரக கல் ஏற்பட காரணமாக அமையும்.
 
சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கும், இது வலியை ஏற்படுத்தும். இந்த வலி சிறுநீரகத்தையும் அடையலாம். இந்த  சூழ்நிலையில், ஒருவர் சிறுநீரை கழித்த பின்னர் வலியிலிருந்து நிவாரணம் பெறுவார். இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற்றாலும் எதிர்காலத்தில் கடுமையான  சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையின் அளவை அதிகரிக்கலாம் மற்றும் அதன் சதைகளை விரிவுபடுத்தலாம். இந்த மாற்றங்கள் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது. 
 
சிறுநீரை அடக்கி வைப்பதால் பல சூழ்நிலைகளில், சிறுநீரை வெளியிடுவதும் பிளேடருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல் நம்மை அறுவை சிகிச்சைக்கு நம்மை கொண்டுச்செல்லலாம்.
 
சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது. உண்மையில், கழிப்பறை சுத்தமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில்  நாம் அங்கு சிறுநீர் கழிக்க போகும்போது, ​​பாக்டீரியா வளர வாய்ப்பு கிடைக்கக்கூடும், இது சிறுநீக பை வரையிலும் பாதிக்கலாம். இந்த தொற்று பல தீவிர நோய்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்