கடுகில் கல்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாது உப்பு, வைட்டமின்கள், ஆக்சிடெண்டுகள், சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற சத்துக்கள் உள்ளன.
கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோசத்தை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கவும் மற்றும் இன்னும் பல அசாதாரண மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
சமையலை தவிர கடுகு எண்ணெய்யானது காய்கறி சாலட்களிலும், குழந்தைகளின் மசாஜ் எண்ணெயாகவும், தலையில் தடவும் எண்ணெயாகவும், முகம் மற்றும் உடலில் தடவவும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பல் துலக்குவதற்கு முன்பு, கொஞ்சம் கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி, சிறது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால், பற்களில் உண்டாகும் நோய் தொற்று, ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் கசிதல் போன்றவை சரியாகும்.
பற்கள் பளிச்சென மின்னவும், பற்களில் உள்ள கறைகள் நீக்கவும், பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய், நான்கு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து, வாயில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்து, வாய் கொப்பளிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.