நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணிக்கவும், வயிறு சம்மந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கவும், ஜலதோஷம், ஆஸ்துமா போன்றவை நீங்கவும் ஓமம் பெரிதும் உதவுகிறது.
வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தாலோ, வயிறில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்ட பிறகு இருவது நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு இந்த பொடியை தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கும். அதோடு நன்றாக பசி எடுக்கும்.