வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் உள்ள வெப்பம் தான் காரணம்.
 
தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும்.
 
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
 
மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்
 
வெந்நீர் பருகுவதால் உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.
 
வெந்நீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். தலையில் உள்ள பொடுகையும் கட்டுபடுத்தும். முக்கியமாக, வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்