பப்பாளி இலை, பப்பாளி காய், பப்பாளி பழம் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாது.