பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.
* தேங்காய் எண்ணெய் இரண்டு மடங்கு ஒரு ‘மாய்ஸரஸர்’ ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும், தேங்காய் எண்ணெய்யைத் தடவி பயனடையலாம்.
* தேங்காய் எண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடான டீயில் கலந்து ஒரே மடங்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும். மேலும் மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தடவினால், மூக்கடைப்பு நீங்கும்.
* பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின்மீது தடவினால், சிறிது நாட்களிலேயே பற்கள் மின்னுவதை பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் கலந்துகொள்ளலாம்.