செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் கொண்டை கடலை...!!

கொண்டைக் கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க பெரிமும் உதவி புரிகிறது. இங்கு அந்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

கொண்டைக் கடலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே  எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். 
 
இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால்  பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். 
 
இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம்  மற்றும் மக்னீசியம் தான் காரணம். கொண்டைக் கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான பிரச்சனைகள் அகலும். 
 
முக்கியமாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். கொண்டைக் கடலையை தொடர்ந்து எடுத்து வந்தால்,  இதய நோய் வருவதைத் தடுக்கலாம். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
 
கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு,  நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச் சத்து போன்றவை இருக்கிறது. 
 
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ள பெண்கள், கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகும். மேலும் இது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக  புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை  சரிசெய்யவும் உதவும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்