பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால், பிரட்டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாம், வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் தவிர்க்கலாம்.
நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழங்களை தேர்ந்தெடுத்து அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.