எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எருக்கன் செடியின் இலைகளை நன்கு காயவைத்து, அதனைப் பொடித்து புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் ஆறும்.
எருக்கன் செடியின் இலைச்சாறுடன், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெய்யில் வேகவைத்து, பின்பு இதை தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு தடவினால் விரைவில் குணமாகும்.
எருக்கன் பூவை காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.
காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் குத்திய முள் வெளியே வந்துவிடும் இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம்.