வெறும் வயிற்றில் வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள்...?

புதன், 19 அக்டோபர் 2022 (11:35 IST)
எளிதாக கிடைக்ககூடிய வெண்டைக்காய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்ற காயாகும். இதில் உள்ள வழவழப்புத் தன்மை அதிக அளவு மருத்துவ நன்மைகளை தரக்கூடியது.


நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் அடிக்கடி வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். மேலும் வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாடு நன்றாக இருக்கும்.

சுவாச பிரச்சனைகளை போக்க, வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயத்தையும் போக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் குடல் இயக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை எளிதினில் நீக்க உதவுகிறது.

பெண்களுக்கு மிகவும் உகந்த காயாகும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், இந்த வெண்டைக்காயில் அதிகமாகவே உள்ளது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி இதய நோய்களால் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கும்.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் அதீத உணர்வை கட்டுபடுத்தி, உடலுக்கு தேவையான சத்துக்களை தந்து, உடல் எடையும் சீராக குறைக்கவும் உதவும். மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற வயிற்று உபாதைகளும் இதனால் குணமாகும்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்