முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும். மேலும் ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. அவர்கள், முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.