உளுந்தில் உள்ள புரதச்சத்தானது தசைகளின் வளர்ச்சியையும், அவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் தசைகளை உறுதியானதாகவும், அழகாகவும் மாற்றுகிறது. எனவே உளுந்தினை உண்டு ஆரோக்கியமான தசைகளைப் பெறலாம்.
உலர்ந்த பொலிவிழந்த கேசத்தில் உளுந்தினைப் பயன்படுத்தும்போது அது கேசத்திற்கு பொலிவையும், வலிமையையும் கொடுக்கின்றன. இதற்கு காரணம் உளுந்தில் உள்ள தாதுஉப்புக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகும். மேலும் பாசி பயறுடன் உளுந்தினை சேர்த்து உபயோகித்தால் பொடுகு தொந்தரவு நீங்குவதுடன் கேசம் பளபளக்கும்.
உளுந்தில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, போலேட்டுகள் போன்றவை கர்பிணிக்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமனவையாகும். எனவே கர்ப்பிணிகள் உளுந்தினை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.