எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய புரதச்சத்துக்கள் நிறைந்துள்ள உடைத்த கடலை !!

புதன், 8 ஜூன் 2022 (10:34 IST)
உடைத்த கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.  


உடைத்த கடலை பருப்பில் இருக்கும் புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

உடைத்தகடலை பருப்பில் அதிகளவு புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகம் சாபிடுபவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிது சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கும்.

உடைத்த கடலை பருப்பில் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் இதர சத்துகள் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவாக நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்கு உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்