வெரிகோஸ் வெயின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற உதவும் குறிப்புகள் !!

ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்று கொண்டே இருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு விழும். இதனால் அதிகமாக வலி ஏற்படும். 

நரம்பு சுருட்டல் என்ற வெரிகோஸ் வெயின் வந்துவிட்டால் பாதங்களில் வீக்கம், அரிப்பு, வலி உணர்வு அதிகமாக ஏற்படும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை வரும்.
 
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இந்த நோய் தாக்குகிறது. அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி  பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல்  சரியாகும்.
 
சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.
 
மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு  முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால்  படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்