துத்தி இலையைக் கொண்டுவந்து மண்பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொறுக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கோவணம் கட்டுவது போன்று துணியை வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ரத்த மூலம், கீழ்மூலம் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.
கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறுஇருபத்தினான்கு கிராம் நெய் பன்னிரண்டு கிராம்கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும். ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன் பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.
துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டுவந்தால் மூலச்சூடு நீங்கும். எழிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையைஇடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்துகளியாகக்கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டிவந்தால் அவை எளிதில் பழுத்த உடையும்.
துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவுசர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால்நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய் இரத்த வாந்தி, முதலியவை குணமாகும்.