சப்ஜா இலை உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீரை வெளியேற்றும் என்பதால் வியர்வையாக வெளியேற்றிவிடும். சளி, சைனஸ் தொந்திரவால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் இந்த இலைகளை கைபிடி அளவு எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நல்ல பலனளிக்கும். இது உடல் சூட்டை குறைக்கும் என்பதால் கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.