இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு கரும்புச்சாறு !!

வெண்கரும்பு, செங்கரும்பு ஆகியவை ஒரே மாதிரியான மருத்துவ குணங்களை கொண்டவை. கரும்பு சாறை பயன்படுத்தி உடல் எரிச்சலை சரிசெய்யும் மருந்து  தயாரிக்கலாம். 

20 முதல் 30 மில்லி அளவுக்கு கரும்புச்சாறு எடுக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து ஓரிரு முறை குடித்துவர உடலில் ஏற்படும் எரிச்சல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.
 
30 மில்லி அளவு கரும்புச்சாறுடன் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கலந்து குடித்துவர நீர்ச்சத்து குறைபாடு  நீங்கும். உடலுக்கு பலம் தரும். சுறுசுறுப்பை கொடுக்கும். செரிமானம் ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். 
 
பல்வேறு நன்மைகளை கொண்ட கரும்பு, பித்தசமனியாக விளங்குகிறது. உள்ளங்கை, காலில் ஏற்படும் எரிச்சல், உடல் வறண்ட தன்மை, அதிக உஷ்ணத்தால் உடல் எரிச்சல் பிரச்னைகளுக்கு கரும்புசாறு மருந்தாகிறது.
 
கரும்பு சாறு ஆரோக்கியம் தரும் பானமாக விளங்குகிறது. வயிற்றுபோக்கு, அதிக சிறுநீர், வியர்வை வெளியேறுவது போன்றவற்றால் நீர்சத்து குறையும்.  இப்பிரச்னைக்கு கரும்பு அற்புதமான மருந்தாகி பயன்தருகிறது. செரிமானத்தை சீர்செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை  சரிசெய்யும். வயிற்று புண்களை ஆற்றும். 
 
கரும்பை மென்று திண்பதால் பற்கள், ஈறுகள் பலம் பெறும். கரும்பை நசுக்கி பசையை புண்களில் கட்டி வைப்பதால் புண்கள் விரைவில் குணமாகும். நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் மெழுகு போடவும். இதில், நாட்டு சர்க்கரை சேர்த்து  பாகுபதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து முகப்பரு மீது பூசிவர முகப்பரு மறையும்.
 
பல் வலி, பல் கூச்சத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு லவங்கப்பட்டை மருந்தாகிறது. லவங்க பட்டையை பொடியாக்கி, இதனுடன் தேன்  கலந்து பூசிவர பல் கூச்சம், பல் வலி, ஈறுகள் வீக்கம் பிரச்னைகள் சரியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்