தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.
தக்காளி சாறு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. ஏனென்றால் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் தக்காளி சாறு குடிப்பதால் பதினெட்டு சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என கூறப்படுகிறது.
இதயம் என்பது நமது உடலின் முக்கியமான ஒரு உறுப்பு. இந்த இதயத்தை பாதுக்காக்க இந்த தக்காளி சாறு மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன. அவை இதயத்திற்கு ஆரோக்கியதை தருகின்றன. ஆகவே தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு குடிப்பது மிகவும் நல்லது.