உலர் பழங்களில் நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும் !!

உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும்  நிறைய உள்ளன.

உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 
 
பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும்.
 
உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு  எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான  ஆரோக்கியத்தை அடையலாம்.
 
இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.
 
உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும். 
 
அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்