ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய்.
நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது.
இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும். இதே போல ஏலக்காயை மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும்.
நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.
நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.