மஞ்சளின் மகத்துவமும் அதில் உள்ள மருத்துவமும்!!

புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சளில் விட்டமின் சி உள்ளது. மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதினால் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பைக் கட்டுப்படுத்தும். தன்மை கொண்டது. மஞ்சளில் தாதுப் பொருட்களான மாங்கனிஸ்,பொட்டாசியம், இரும்பு, கல்சியம். துத்தநாகம். தாமிரம்,  மெக்னீசியம், போன்றவை அடங்கியுள்ளன.
மஞ்சள் தூளுடன் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்துப் பூசினால் புண், சுளுக்,கு, உரசல் காயங்கள், மூட்டு வலி குணமாகும். பெருங்காய தூளையும் மஞ்சள் தூளையும் நீரில் கலந்து கொதிக்க வைத்து வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
 
கெட்ட கொழுப்புக்களைக் கட்டுப்படுத்தும் எதிர் பொருட்கள் நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ல இதில் நியாசின், நிபோபிளவின். பைரிடாக்சின். சோலைனுள்ளிட்ட பல முக்கிய வேதியல் பொருட்கள் மஞ்சளில் அடங்கி உள்ளன.
 
மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அதன் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாக்கும். கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. 
 
அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி  மஞ்சள் பயன்படுகிறது.
 
இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப்  பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்